திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றதனால்,சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதற்கிடையில், சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்,ஏற்கனவே பெய்த மழையால்,வெள்ள நீர் தேங்கியுள்ளதன் காரணமாகவும்,மழை தொடர்வதாலும் சென்னை,காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளையும் (நவ.12) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னதாக அறிவித்தனர்.
மழை காரணமாக ஏற்கனவே நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில்,மேலும்,மழை தொடர்வதால் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை தொடருவதால் நாளை பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம்,தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…