வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து எதிர்த்து தமிழக அரசு மேலும் 3 மேல்முறையீட்டு மனு தாக்கல்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அரசு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதாக மனுவில் புகார் தெரிவித்தனர்.
முறையான சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற என மனுவில் தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கு கடந்த 1-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர் சமூகத்தினருக்கான10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் தீர்ப்பளித்துள்ளனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தந்தது செல்லாதது. அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக்கூறி நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பு வழங்கினர். இந்நிலையில், 10.5% வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சகம் சார்பில் தனியாக மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் & தமிழ்நாடு சட்டத்துறை செயலாளர் ஆகியோர் சார்பிலும் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…