#BREAKING: 50% இடஒதுக்கீடு வழக்கு- நாளை விசாரணை.!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை.
முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்றும், மருத்துவப் படிப்பில் குளறுபடிகள் நடப்பதாகவும் சர்ச்சை எழுந்து வருகிறது. எனவே, முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசுக்கு ஆணையிடக் கோரி அதிமுக, திமுக, மதிமுக போன்ற கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுசம்பந்தமாக உயர்நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில், மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக, அதிமுக மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கு மீது நாளை விசாரணை நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025