#BREAKING: நடிகர் சங்க தேர்தல் செல்லும் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

The Chennai High Court has ruled that the Actors' Union elections held on June 23, 2019 will go ahead.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும் மறுதேர்தல் தேவையில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாசர், விஷால், கார்த்தியின் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் புஷ்பா சந்திரநாராயணா, முகமது ஷபீக் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

2019-ல் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரத்திற்குள் எண்ணி, முடிவை அறிவிக்க தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வாக்கு பெட்டியை தேர்தல் அதிகரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என அறிவித்திருந்த தனி நீதிபதி கல்யாண சுந்திரத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.