#Breaking:நடிகை மீரா மிதுன் மீதான புகார் – குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன்..!

#Breaking: Actress Meera Mithun summoned by Crime Branch Cyber Crime Police ..!

பட்டியலின மக்கள் தொடர்பாக அவதூறான கருத்து பரப்பும் வகையில் நடிகை மீரா மிதுன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட  புகாரில் நேரில் ஆஜராகுமாறு குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பட்டியலின மக்களை நடிகை மீரா மிதுன் இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரை அடுத்து நடிகை மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில்,நடிகை மீரா மிதுன் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.