#Breaking: அதிமுக கூட்டணி தொடர்கிறது – ஓபிஎஸ் & ஈபிஎஸ் கூட்டறிக்கை!

2021 சட்டமன்ற தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணி தொடர்வதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், நாம் அனைவரும் ஒருவொருக்கொருவர் உறுதுணையாய் இருந்து தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என்றும் தேர்தல் வெற்றி, தோல்விகள் பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல, மக்கள் நலனே நமது குறிக்கோள் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நாம் ஆட்சியை இழந்தாலும் மக்களின் பேரன்பு தொடர்கிறது. அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி தொடர உறுதுணையாக இருப்போம் என ஓபிஎஸ், ஈபிஎஸ் உறுதி அளித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் தொய்வை, மனசோர்வை ஏற்படுத்தி இருந்தாலும் பொதுவாழ் பயணம் வீறுநடை போடுகிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாக ஓபிஎஸ் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். தேர்தல் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசிய நிலையில், அதிமுக தலைமை தற்போது விளக்கமளித்துள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது – ஓ.பன்னீர்செல்வம் & எடப்பாடி பழனி சாமி கூட்டறிக்கை pic.twitter.com/u9FtO0snnH
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 7, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025