#BREAKING: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – கார் பரிசு வழங்க தடை

The Madurai branch of the High Court has imposed an interim injunction to award a car to Kannan, who won the first prize at Alankanallur Jallikkat.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற கண்ணனுக்கு கார் பரிசு வழங்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 16-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை யொட்டி உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 காளைகளை அடக்கி கண்ணன் என்பவர் முதல் பரிசை தட்டிச் சென்றார். பின்னர் கண்ணன் மோசடியில் ஈடுபட்டதாக 9 காளைகளை அடக்கி இரண்டாம் பரிசு பெற்ற கருப்பண்ணன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில் ஈடுபட்டனர். இதனால் முதல் பரிசை யாருக்கு வழங்குவது என்பது குறித்து ஜல்லிக்கட்டு விழா குழுவினர் முடிவு செய்வார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு வென்ற கண்ணனுக்கு கார் பரிசு வழங்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.