#BREAKING: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார்..!

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறது. தனிப்படை முகாமிட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க இன்று விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சத்துணவு பணியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் மோசடி செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். சாத்தூரை சார்ந்த பெண் ஒருவர் விருதுநகர் எஸ்.பி மனோகரிடம் புகார் அளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025