#BREAKING: B.E, B.Tech செமஸ்டர் தேர்வு – அட்டவணையை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!

ஆன்லைனில் நடைபெறும் செமஸ்டர் தேர்வு பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் நிறைவடைகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
B.E, B.Tech, மற்றும் B.Arch மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடைபெறும். பிப்ரவரி 1 முதல் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பாடவாரியாக அட்டவணையை வெளியிட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து, மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என ஏற்கனவே உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025