#Breaking : பாஜக-வின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசு அதிரடி!

பாஜக சார்பில் நடைபெறவிருந்த வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக அரசு.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர்-6ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரையை நடத்த தடை விதிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சியினரும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர், வேல் யாத்திரைக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இதனையடுத்து, இன்று பாஜக சார்பில் நடைபெறவிருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025