டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. எனவே, தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 11-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.