#BREAKING : உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவு..!

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு.
காவலர் – பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடவும், புதிய பயிற்சி முறைகளைப் பரிந்துரைத்திடவும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. சி.டி. செல்வம் அவர்கள் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, இந்த புதிய காவல் ஆணையத்தில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு.சி.டி செல்வம் அவர்களைத் தலைவராகவும். திரு.கா. அலாவுதீன் (ஐஏஎஸ் அதிகாரி, ஒய்வு), முனைவர் திரு.கே இராதாகிருஷ்ணன் (ஐபிஎஸ் அதிகாரி, ஒய்வு), மனநல மருத்துவர் திரு.சி.இராமசுப்பிரமணியம், முன்னாள் பேராசிரியர் முனைவர் திருமதி நளினி ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும், காவல் துறை குற்றப்புலனாய்வு) கூடுதல் இயக்குநர் திரு. மகேஷ்குமார் அகர்வால் அவர்களை உறுப்பினர்-செயலராகவும் நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025