துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில் பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை அணியப்பட்டது என்று ரஜினி பேசினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினியின் இந்த பேச்சிற்கு எதிராக தமிழகத்தில் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகின்றது.பெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.பெரியார் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதேபோல் ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகத்தை சார்ந்த நேரு தாஸ் என்பவர் தொடந்த வழக்கில் ,கோவையில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.ஆனால் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது.இந்த இரு வழக்குகளும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது,புகார் கொடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.இதனால் வழக்குகளை வாபஸ் பெறுவதாக திராவிடர் கழகம் சார்பில் தெரிவிக்கப்ட்டது.எனவே நீதிமன்றம் வழக்கினை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…