#BREAKING: கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – தமிழக அரசு

The Tamil Nadu government has announced a reduction of Rs 1,200 for corona examination fees in private hospitals and laboratories.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.1,200 ஆக குறைப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மையங்களில் ரூ.800க்கு கொரோனா பரிசோதனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.1,200 ஆக குறைக்கப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.