#BREAKING: திண்டுக்கல் சிறுமி வழக்கு.. தமிழக அரசு மேல்முறையீடு..!

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிறுமி கலைவாணி வீட்டில் தனியாக இருந்த போது, கிருபானந்தன் என்பவரால், பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் செலுத்தி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, கிருபானந்தானை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கிருபானந்தனின் விடுதலை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025