#BREAKING: கள்ள ஓட்டு போடுவதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு.!

தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நேர்மையாக, நியாயமாக நடக்கிறது என வாக்காளர்கள் திருப்தியடையும் வகையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல், கள்ளஓட்டு போடுதல், வாக்கு இயந்திரத்தில் மோசடி போன்றவற்றை தடுப்பதை உறுதி செய்க என தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என திமுக தொடுத்த வழக்கில் இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மேலும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கில் வரும் திங்கள்கிழமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஆணையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025