#BREAKING: தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம்!

பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 4 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மூவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில், நெல்லை டவுனில் சாஃப்டர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேசுராஜ், அருள் டைட்டஸ் , சுதாகர் டேவிட் ஆகிய 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025