#Breaking: தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இன்று மேலும் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு 11,224 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 10,585 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 11,224 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 482 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 6,750 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 634 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 4,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா கண்டறியப்பட்ட 639 பேரில் 81 பேர் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் மட்டும் 13,971 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 3,26,720 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 639 பேரில் ஆண்கள் 398 பேர், பெண்கள் 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11,224 பேரில் ஆண்கள் 7,343 பேரும், பெண்கள் 3,878 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 6,971 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.