சேலம்:வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி கைது.
சேலம் மாவட்டம்,ஓமலூர் தின்னப்பட்டி அடுத்த பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி.இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் 10 ஆண்டுகால தனி உதவியாளராக இருந்து வருகிறார்.
இவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நெய்வேலியினைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார்.அதில்,மணிக்கு தான் 17 லட்சம் ரூபாய் கொடுத்திருந்ததாக தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,தலைமறைவான மணியின் முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில்,அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்த புகாரில் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணியை, அவரது வீட்டில் வைத்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…