#breaking: மீண்டும் பிரதமர் மோடி பிப்.25ல் கோவை வருகிறார் – சிடி ரவி

பிரதமர் மோடி பிப்.25-ஆம் தேதி கோவை வரவுள்ளதாக பாஜகவின் சிடி ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு வரும் 25-ஆம் தேதி மீண்டும் வரும் பிரதமர் மோடி அரசு பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். பிப் 19-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருவதாகவும் சிடி ரவி தெரிவித்துள்ளார். மேலும், மத்திய பாதுகாப்பாத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரும் 21-ஆம் தேதி சேலம் வருகிறார் என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்று சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். நேரு நேரு உள்விளையாடு அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மோடி, உள்நாட்டிலேயே தயாரான அர்ஜூன் மார்க் 1ஏ பீரங்கியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனைத்தொடர்ந்து, பல்வேறு முக்கியத் திட்டங்களை சென்னையில் துவக்கி வைத்து, அடிக்கல் நாட்ட உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கோப்பை இந்தியாவுக்கு தான்…ஹர்திக் பாண்டியா சம்பவம் பண்ண போறாரு! மைக்கல் கிளார்க் பேச்சு!
February 16, 2025
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025