#BREAKING: ராஜேஷ் தாஸ் வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்.!

The High Court has ordered that the sex-related case against Special DGP Rajesh Das be monitored.

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்பட்டது. அந்த பெண் எஸ்.பி, காவல்துறை டி.ஜி.பி, உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, 6 பேர் கொண்ட குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்திருந்தது. இதைத்தொடர்ந்து, பெண் ஐ.பி.ஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இன்று ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். அதன்படி, ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரித்து இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார்.

அப்போது, பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்றும் விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தர வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் பற்றி காவல்துறை ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆவண தாக்கல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.