BREAKING: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.இதனால், நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
சமீபத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகின்ற ஜூலை 1 முதல் 15-ம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறாமல் உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது என்று கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு@KASengottaiyan #PublicExam pic.twitter.com/OUcYZ0il5J
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 12, 2020
இந்நிலையில், இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது, தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படும்.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025