#BREAKING: தருமபுரம் ஆதீன பட்டிணப்பிரவேசம் தடையை நீக்குக – ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்!

Published by
பாலா கலியமூர்த்தி

தருமபுரம் ஆதினம் பட்டிணப் பிரவேசத்திற்கு தடையை நீக்கக் கோரி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தருமபுரம் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுப்பதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாடு சட்டசபை இன்று மீண்டும் கூடியுள்ளது. அதன்படி தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழிநுட்பத்துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த சமயத்தில் தருமபுரம் ஆதினம் பட்டிணப் பிரவேசத்திற்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய ஈபிஎஸ், பாரம்பரியமாக நடந்து வரும் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்குவதற்கு விதித்த தடையை நீக்க வேண்டும். ஆதீனத்தில் வசிக்கும் 72 பேரும் விருப்பப்படிதான் பல்லக்கு தூக்குவதாக கூறுகின்றனர்.

தோளில் தூக்கி செல்வதில் மரியாதை குறைவு என்று எதுவும் கிடையாது. பழம்பெரும் வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பட்டண பிரவேசம் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமர வைத்து மனமுவந்து சுமந்து வருவது ஒரு ஆன்மிக நிகழ்வு என்றும் பல்லக்கு தூக்குபவர்கள் பாரம்பரியமாக ஆதீனத்திற்கு சொந்தமான இடத்திலேயே வசித்து வருபவர்கள் எனவும் கூறினார். மத சுதந்திர உரிமை அடிப்படையில் பல்லக்கில் தருமபுரம் ஆதீனம் பட்டணப்பிரவேசம் செய்ய தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்கப்பட்டதுக்கு பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து, கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆதினங்களுடன் 3 மணி நேரத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. தருமபுரம் ஆதீனம் கடந்த வாரம் முதலமைச்சரை சந்தித்துவிட்டு ஆன்மிக அரசு என்று பேட்டியளித்திருந்தார். எனவே, பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்ட விகாரத்தில் தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதல்வர் முடிவெடுப்பார் என்றும் மே 22ல் தான் பல்லக்கு தூக்கு நிகழ்வு நடக்கிறது, அதற்குள் பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

1 hour ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

3 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

4 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

6 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

6 hours ago