#BREAKING: சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை 22 வரை நீட்டித்து உத்தரவு!

The court remanded Sivashankar Baba in custody till October 22 on a sexual harassment charge.

பாலியல் புகாரில் சிறையிலுள்ள சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 22ம் தேதி வரை நீடித்தது நீதிமன்றம்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் சுசில் ஹரி பள்ளி நடத்தி வரும் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் டெல்லியில் பதுங்கி இருந்த அவரை கடந்த ஜூன் 16-ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பாலியல் புகாரில் சிறையிலுள்ள சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 22ம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவசங்கர் பாபாவை மீண்டும் 22ம் தேதி ஆஜர்படுத்தவும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.