#BREAKING: தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!

As the session of the Legislature began on the 2nd of last month, Speaker Danapal adjourned without specifying a date.

கடந்த 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பதிலுரையும் நடைபெற்றது. இதன்பின் சட்ட மசோதா ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் நடைபெற்ற நிலையில், 8 முக்கிய மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், கடந்த 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், சட்டபேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்திருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறை பதிவு செய்த வழக்குகள் திரும்ப பெறப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி தண்டனையை அதிகரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது. தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் மாதம் வரை நீடிப்பது குறித்து மசோதா நிறைவேறியது. மேலும் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்க சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.