#BREAKING : சென்னை ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 742 ஆக உயர்வு.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 742 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று மட்டுமே 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை 8002 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் தான் வழக்கம் போல கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று மட்டுமே 538 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 742 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 713 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025