#BREAKING: முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்கிறோம்.. வி.பி.துரைசாமி..!

சமீபத்தில், பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என்று கூறினார் . மேலும், இப்போது உள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, சட்டமன்றத்துக்கு கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இவரது கருத்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நேற்று இது குறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறுகையில், தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும், எங்களால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இடம்பெற முடியும்.
ஏற்றுகொள்ளாதவர்கள் நிச்சயம் எங்கள் கூட்டணியில் இருக்க முடியாது என தெரிவித்தார். இந்நிலையில், பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
எங்கள் கூட்டணியில் கட்சிகள் மாறும் நிலை இல்லை. முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் தெரிவிக்காத நிலையில் வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025