#Breaking : வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேர் உயிரிழப்பா…?
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, ஐந்து கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் புகார்.
இந்தியாவில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தை கடந்துள்ள நிலையில், நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற நிலையில், அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதனையடுத்து, தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, ஐந்து கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா சிறப்பு வார்டில் இருந்த நோயாளிகளை, வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேரும் உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் புகார் அளித்துள்ள நிலையில், நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை என மருத்துவமனையின் டீன் செல்வி விளக்கம் அளித்துள்ளார்.