'மக்களால் நான்... மக்களுக்காக நான் ! நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம்

By The People For The People The Text Is Engruved Formar Chief Minister of Tamil Nadu Jayalalithaa Memorial in Chennai

“மக்களால் நான், மக்களுக்காக நான்” என்று வாசகம் பொறிக்கப்பட்ட ஜெயலலிதா  நினைவிடம் திறக்கப்படுவதற்காக தயார் நிலையில் உள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்தை துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட உள்ளது. ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

மெரினா கடற்கரையில் 50,422 சதுர அடியில் ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாதேர்தல் பரப்புரைகளில்  அடிக்கடி பயன்படுத்தும் “மக்களால்நான்,மக்களுக்காகநான்”( “BY THE PEOPLE FOR THE PEOPLE” ) என்ற வாசகம் அவரது நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.