நீட் தேர்வை ரத்து செய்வதே தற்கொலைகளுக்கு தீர்வு – அன்புமணி ராமதாஸ்.!

Published by
பாலா கலியமூர்த்தி

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் நீட் ரத்தே தற்கொலைகளுக்கு தீர்வு என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதனிடையே, மதுரையில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் முருகசுந்தரத்தின், மகள் ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், மாணவி தொடர்ந்து நாளை நடைபெறவுள்ள தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். இன்று அதிகாலை வரை தேர்வுக்கு படித்துள்ளர். தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும், அவர் தற்கொலைக்கு முன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்ப்பார்த்தீங்க. ஆனா, எனக்குதான் பயமா இருக்கு இது என்னுடைய முடிவு. இதற்கு யாரும் காரணமல்ல ஐ லவ் யூ அம்மா என்று உருக்கமாக ஆடியோவில் பேசியுள்ளார். இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அம்புமணி ராமதாஸ் கூறுகையில், நீட் தேர்வு குறித்த அச்சத்தால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வேதனையளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும். குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் மட்டுமாவது நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும். நீட் ரத்தே தற்கொலைகளுக்கு தீர்வு என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

3 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

5 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

8 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

8 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

9 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

12 hours ago