கேப்டன் இஸ் பேக் !கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்-விஜயபிரபாகரன் தகவல்

Default Image

விஜயகாந்த் அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இதற்காக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு  சிகிச்சையும் பெற்று வந்தார்.

ஆனால் அவர் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவர் தனது அரசியல் பயணங்களை குறைத்து தான் வருகிறார்.கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் விஜயகாந்தின் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைதேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்