சென்னை மரங்கள் இனி ஹேப்பி அண்ணாச்சி! வந்தாச்சு அதிரடி அறிவிப்பு!

சென்னையில் உள்ள மரங்களின் மீது விளம்பர பதாகைகள் வைத்தால், வைத்தவர்கள் மீது 25 ஆயிரம் அபராதமும் 3 வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தற்போது அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னையில் இதற்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் சென்ற வாரம், மரங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்க கூடாது என ஏற்கனவே கூறியிருந்தது. சென்றவாரம் அந்த விதி தளர்த்தப்பட்டு சென்னை கார்ப்பரேஷனாது, தங்களிடம் அனுமதி பெற்று விளம்பர பதாகைகள் வைக்கலாம் என கூறியிருந்தது.
இந்நிலையில் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள்ளது. அதில், மரங்களில் எந்தவித விளம்பர பலகைகளும் வைக்க கூடாது எனவும், மீறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இருக்கும் பதாகைகளை இன்னும் 10 நாட்களில் நீக்கப்பட விட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.