வணிகத்துறை அதிகாரிகள் 3 பேரை கைது செய்த சிபிஐ..!

புதுச்சேரியில் இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலையிடம் வணிகத்துறை அதிகாரிகள் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து, 100 அடி சாலையில் உள்ள வணிக வரி வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த அலுவலகத்தில் ஜெயபாரதி என்பவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இன்று காலை முதல் வணிக வரி ஆணையர் முருகானந்தம், ஆனந்தன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு பின்னர் கைது செய்தனர். இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்ட புகாரில் வருமான வரி ஆலோசகர் சித்ரா, துணை ஆணையர்கள் ஆனந்தன், முருகானந்தம் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025