ஸ்டாலின் வீட்டுக்கே 100 யூனிட்..திமுக ஆட்சியே இருண்ட ஆட்சி-செல்லூர் ராஜூ நறுக்

Default Image

திமுக ஆட்சி காலமே தமிழகத்தின் இருண்ட காலம் என்றும் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கே 100 யூனிட் இலவச மின்சாரத்தை அரசு அளித்து வருகிறது தருகிறோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ 

மதுரையில் அதிமுகவின் 49வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:

நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் அதிமுக அரசு உறுதியான நிலைப்பாட்டுடன் உள்ளது.

திமுக அரசாக இருந்தால் நழுவி கொண்டு சென்றிருக்கும் மத்திய அரசுக்கு இணையான மாநில அரசின் பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் தேர்ச்சி சதவீதம் பலமடங்கு அதிகரிக்க உள்ளது.

எங்களுக்கு போட்டி திமுக மட்டுமே கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு எதிரிகள் இல்லை என்று கூறினார். மேலும் அவர் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் திமுக ஆட்சியில் தான் தமிழகம் மின்வெட்டால் இருண்டு கிடந்தாகவும் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்வதாக தெரிவித்தார்.

மேலும் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே அதிமுக அரசு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக அர்சு வழங்கி வருகிறது.அதிமுக சொந்த காலில் நிற்கவே விரும்புகிறோம்.

அடுத்தவர்களின் காலை நம்பவில்லை.திமுக கொள்ளையடிப்பதை கலையாக கொண்டுள்ளது.ஊழலுக்கு என்று பெயர் பெற்ற கட்சி திமுக.பிரதமரின் நல்ல செயல்பாடு மற்றும் அதிமுக கூட்டணி செயல்படுகிறது.பாஜகவின் செயல்பாடு எங்களுக்கு பிடித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மகன் மட்டும் இப்பொழுது சிக்கியுள்ளார். இன்னும் பலர் சிக்குவார்கள்.திமுகவினர் இந்தியை எதிர்ப்பது போன்று நாடகமாடுகிறார்கள்.

அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி பாடம் நடத்துகிறார்கள்.2ஜி அலைக்கற்றை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.இதில் பலர் சிக்க இருக்கிறார்கள். எங்களுக்கு சுய செல்வாக்கு இருக்கிறது.தோழமை கட்சிகளின் செல்வாக்குகளும் நல்ல பயனைத் தரும் என்று கூறினார்.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்