தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.!

Published by
பால முருகன்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு எனவும், இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம், சென்னை, செங்கல்பட்டு, ஆகிய 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் ககூடிய, கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

23- ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

24- ஆம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

25- ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது கன மழையும் இருக்ககூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

காமராஜர் குறித்த சர்ச்சை : “மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம்”.. திருச்சி சிவா விளக்கம்!

காமராஜர் குறித்த சர்ச்சை : “மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம்”.. திருச்சி சிவா விளக்கம்!

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து தான் பேசிய…

43 seconds ago

சீறி பாய்ந்த ”ஆகாஷ் பிரைம்” வான் பாதுகாப்பு அமைப்பு.! லடாக்கில் சோதனை வெற்றி.!

லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…

9 hours ago

”அடுத்து மரங்களோட ஒரு மாநாடு நடத்தப்போறேன்” – சீமான் அதிரடி அறிவிப்பு..!

திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…

10 hours ago

“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!

கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…

10 hours ago

சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!

டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…

11 hours ago

நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…

12 hours ago