தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்..!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி சிவகங்கை, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு, மத்திய மேற்கு வடக்கு அரபிக்கடல் பகுதியில், சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.