சென்னை பெண் மருத்துவருக்கு கொரோனா.! மருத்துவமனை முழுவதும் முடக்கம்!?

சென்னை, தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்த பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், மேலும் நோய் பரவாமல் தடுக்கவும், சமூக தொற்று உருவாகாமல் தடுக்கவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் சென்னையில் தற்போது தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்து வரும் பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அந்த மருத்துவமனையில் வேலைபார்க்கும், மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதனால், அந்த மருத்துவமனையினை தற்போது மூடும் சூழல் உருவாகியுள்ளது.