சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ்க்கு சம்மன்..!

சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், வரும் 13ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி

சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், வரும் 13ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

அப்பல்லோ மருத்துவர்கள் விக்ரம், ராஜ் மாதங்கி ஆகியே இருவரும் 14ம் தேதி ஆஜராக வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன், ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் ஆகியோர் வரும் 16ம் தேதி மறுவிசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அன்றைய தினம் குறுக்கு விசாரணை நடத்துவதற்காக அப்பல்லோ நீரழிவு நோய் மருத்துவர் மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.