பஜ்ஜி சரியில்லை என கூறியவருக்கு 'வெட்டு'! சென்னையை சேர்ந்த வடமாநில வாலிபர் கைது!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஞானமணி என்பவர் எலெக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பருடன் சௌகார்பேட்டை வரை சென்றுள்ளார். அங்கு ஒரு பஜ்ஜி கடையில் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டனர்.
அந்த பஜ்ஜி சரியில்லை என கடைக்காரரிடம் ஞானமணி கூறியுள்ளார். இது தொடர்பாக பஜ்ஜி கடையில் வேலைபார்த்த அருண் என்கிற வடமாநில இளைஞருக்கும் ஞானமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தின் போது, அருண் கடையில் இருந்த கத்தியால், ஞானமணியை தலையில் வெட்டியுள்ளார். ரத்த்ம் கொட்டிய நிலையில் ஞானமணியை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடனிருந்தவர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடை அருகில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025