Makkaludan Muthalvar [file image]
தருமபுரி : பொதுமக்களின் கோரிக்கைகள், தேவைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு அரசின் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஊரகப் பகுதிகளில் இன்று தருமபுரி பாளையம் புதூரில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
“மக்களுடன் முதல்வர்“ திட்டம் என்பது தமிழக முதல்வர் மக்கள் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்க்கும் ஒரு திட்டமாகும். முதல்கட்டமாக நகர்ப்புறங்களில் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்பொழுது, ஊரகப் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15 வரை 12,525 கிராம ஊராட்சிகளில் 2,500 மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன.
அதன்படி, 15 அரசுத்துறைகளின் 44 சேவைகளுக்கு மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட உள்ளன. தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் முதல் கட்டத்தில் 8.74 இலட்சம் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தருமபுரியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரூர் அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். தருமபுரி – வெண்ணாம்பட்டி சாலையில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். பஞ்சபள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் புனரமைக்கப்படும் என்று தெரிவித்தார். பளையம்புதூர் அரசு பள்ளியில் பழுதடைந்த நிலையில் 4 வகுப்பறைகள் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
ரூ.51 கோடி மதிப்பில் அரூர் அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். வெண்ணாம்பட்டி சாலையில் ரயில்வே மோம்பாலம் ரூ.31 கோடியில் மேம்படுத்தப்படும். பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைகட்டுகள் ரூ.50 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும் என்று தருமபுரி மாவட்டத்திற்கு 7 அறிவிப்புகளை வெளியிட்டார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…