21 எழுத்தாளர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர் முக ஸ்டாலின்!!

21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருது மற்றும் ரூ.20,000 ஊக்கத்தொகை வாங்கினார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக 21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழகியுள்ளார். 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டிற்கு தேர்வான 21 சிறப்பு படைப்புகளின் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
மேலும், 21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான ரூ.20,000 ஊக்கத்தொகையை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். எழுத்தாளர்கள் அறிவரசன், வசந்தா, ஆடலரசு உள்ளிட்டோருக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.