நாளை பிரதமரை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முதலமைச்சரை சந்தித்து ஏ.கே.எஸ் விஜயன் வாழ்த்துப் பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். காலை 10:30 மணி அளவில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கரும்பூஞ்சை மருந்து, கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு , தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின், முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 18-ஆம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…