காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2 வது நிலையத்திற்கு, அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி. இந்த 2வது ஆலை நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திறன் கொண்டது ஆகும்.
இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் கூறுகையில்,பேரூரில் தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலை பணி 2021ல் முடிக்கப்பட்டு நீர் விநியோகிக்கப்படும் என்று கூறியுள்ளார். மழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம் ஆகும் என்றும் மழை பெய்தால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் கூறியுள்ளார். எந்தெந்த பகுதிகளில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைக்கலாம் என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டுவருகிறது என்று கூறியுள்ளார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…