பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

unknown node

அந்த கடிதத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குகாக தமிழகத்திற்கு கூடுதலாக 4000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் கொரோனா பாதிப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ள தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.வங்கிக் கடன் வட்டி மற்றும் அபராத தொகையை தள்ளுபடி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார். சிறு, குறு, நடுத்தர தொழில் செய்வோர் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.