ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கேட்டறிந்து வரும் நிலையில் ,நண்பர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த படப்பிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றார்.படப்பிடிப்பின்போது பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அப்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது முடிவுகள் நெகட்டிவ் என வந்தது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கேட்டறிந்து வருகின்றனர்.அந்த வகையில் நடிகரும் , மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…