தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார் வாழ்த்துகிறேன் என ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 158 தொகுதிகளிலும், அதிமுக 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் முதல்வராகும் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிகாரிகள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை நேரில் சென்றும், சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்தடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…