தோழர்.தா.பாண்டியன் உடல்நிலையில் மாற்றம் காணாத நிலை நீடிக்கிறது என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர்.தா.பாண்டியன் நேற்று உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நோய்த்தொற்று மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிற்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறப்பு மருத்துவர்கள் தீவிர சிகிக்சை அளித்து வரும் நிலையிலும் தோழர்.தா.பாண்டியன் உடல்நிலையில் மாற்றம் காணாத நிலை நீடிக்கிறது.
செய்தி அறிந்த கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் டி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் தமீம் முன் அன்சாரி, கருணாஸ், தனியரசு மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்கு நேரில் வந்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் தோழர் தா.பா. குடும்பத்தாரிடம் விசாரித்து சென்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…