சர்ச்சை பேச்சு !நாளை மறுநாள் வரை ரஞ்சித்தை கைது செய்ய தடை

ரஞ்சித்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் வரை ஒத்திவைப்பதாக தெரிவித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதனால் ரஞ்சித் சர்ச்சை பேச்சு விவகாரத்தில், உயர்நீதிமன்ற கிளையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.அதில் ரஞ்சித்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் வரை ஒத்திவைப்பதாக தெரிவித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.மேலும் அதுவரை ரஞ்சித்தை கைது செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025