தமிழ்நாட்டில் மேலும் 22,238 பேருக்கு கொரோனா..38 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு, இன்று ஒரே நாளில் 22,238 பேருக்கு தொற்று உறுதி.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 22,238 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு 33,25,940 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,544 ஆக உள்ளது.
அதுமட்டுமில்லாமல், இன்று ஒரேநாளில் 26,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 33,25,940 பேரில் இதுவரை 30,84,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுபோன்று இன்று மட்டும் 1,36,952 மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 6,16,24,216 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் சென்னை – 3,998, கோயம்புத்தூர் – 2,865, செங்கல்பட்டு – 1,534, திருப்பூர் – 1,497, சேலம் – 1,181, ஈரோடு – 1,127 பேர் என ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்தே காணப்படுகிறது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,03,926 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025