அதிர்ச்சி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா!

நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை செந்தமிழ் நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரத்தில், தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பேட்டை செந்தமிழ் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று சுகாதார பணியாளர்கள் கொரோனா பரிசோதனை மேற்க்கண்டனர். அப்பொழுது அப்பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025